Published : 21,Aug 2017 02:38 PM
மெரினாவில் காவலரைத் தாக்கிய போதை இளைஞர்கள்: ஒருவர் கைது

சென்னை மெரினா கடற்கரையில் ரோந்து வந்த காவலரை, போதையிலிருந்த இளைஞர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். 4 பேரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மெரினா கடற்கரையில் நள்ளிரவில் மது அருந்திக்கொண்டிருந்த 5 பேரை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அகிலன் கண்டித்துள்ளார். அதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் அகிலனை கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடினர்.
இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் பழைய திருமங்கலத்தைச் சேர்ந்த அரிராம் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய மற்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.