' ரொம்ப பிரச்னை கொடுக்கறாங்க... ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன்' என மாநாடு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கண்ணீர்மல்க பேசியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'மாநாடு'. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். மேலும் , கல்யாணி பிரியதர்ஷன் ,பாரதிராஜா, எஸ். ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி உள்ளது. இந்த படம் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. கொட்டும் மழையிலும் சிம்பு ரசிகர்கள் சூழ இந்த வெளியீட்டு விழா நடைபெற்றது.
அப்போது மேடையில் பேசிய நடிகர் சிம்பு, ''ரொம்ப பிரச்னை கொடுக்கறாங்க... ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். என் பிரச்னைகளை நான் பார்த்துக்கொள்கிறேன், என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்'' என கண்ணீர்மல்க பேசினார். சில நிமிடம் அவர் மேடையிலேயே பேச முடியாமல் நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில்பரவி வருகின்றன.
Loading More post
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்