கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலிய அணி வெல்லாத ஒரே கோப்பையாக இருந்து வந்தது டி20 உலகக் கோப்பை தான். ரிக்கி பாண்டிங், கிளார்க், பெய்லி, ஸ்மித் என நான்கு கேப்டன்களால் முடியாததை முடித்துக் காட்டியுள்ளார் ஆரோன் பின்ச்.
ஐந்து முறை ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணி ஆஸ்திரேலியா. இருந்தாலும் அந்த அணியால் டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற ஏக்கம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 173 ரன்களை சுலபமாக சேஸ் செய்து வென்றது ஆஸ்திரேலியா.
மூன்றாவது ஓவரில் கேப்டன் பின்ச், 5 ரன்களில் அவுட்டானார். இருந்தும் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் 92 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அது அணிக்கு வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. வார்னர் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பின்னர் களத்திற்கு வந்த மேக்ஸ்வெல் உடன் கூட்டு சேர்ந்து நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை போட்டுத் தாக்கினார் மார்ஷ். 50 பந்துகளில் 77 ரன்களை எடுத்தார் அவர். மறுபக்கம் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்களை எடுத்தார்.
18.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா. அதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்