கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி அருகே இரட்டை கரை சானலில் சுமார் 150-மீட்டர் உடைப்பு ஏற்பட்டு, அப்பகுதியிலுள்ள ரயில் பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவனந்தபுரம் கன்னியாகுமரி மார்க்க ரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் தொடர்ந்து சாரல் மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அங்கு கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதோடு அணைகளும் நிரம்பி வழிகின்றன.
தொடர்புடைய செய்தி: கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை தொடரும்
இதனால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1 மற்றும் 2-ம் அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வரும் பேயங்குழி இரட்டை கரை சானலில் உடைப்பு ஏற்பட்டது. சானலில் சுமார் 150 மீட்டர் உடைப்பு ஏற்பட்ட நிலையில், வெள்ள நீர் அருகே உள்ள ரயில் பாதையில் புகுந்து பெருக்கெடுத்து ஓடுவதோடு ரயில் தண்டவாளங்களில் மண் குவிந்துள்ளது. இதனால் திருவனந்தபுரம் கன்னியாகுமரி மார்கத்தில் இயங்கும்.
இதனால் அவ்வழியிலான ரயில்களான குருவாயூர் எக்ஸ்பிரஸ், பரசுராம் எக்ஸ்பிரஸ் (மங்களூர் - நாகர்கோவில்), சாலிமர் எக்ஸ்பிரஸ் (கொல்கத்தா - நாகர்கோவில்) உள்ளிட்ட 4 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மண் அகற்றும் பணி விரைவாக நடந்து வருகிறது. மண் அகற்றியபின் சோதனைகளுக்குப் பின் ரயில் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!