மழையால் பாதித்த சென்னை மக்களுக்கு, நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் ‘விஜய் விலையில்லா உணவகம்’ மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழையால் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானதன் காரணமாக தமிழகம் முழுக்க மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை தண்ணீரில் மிதக்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், சென்னை மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் ‘விஜய் விலையில்லா உணவகம்’ மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதற்கு முன்னதாக, ஏற்கெனவே, கொரோனா பெருந்தொற்றிற்கு முன்பிருந்தே தஞ்சாவூரில் ‘விஜய் விலையில்லா உணவகம்’ ஆரம்பித்து ஏழைகளுக்கு மூன்றுவேளை உணவையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர் தஞ்சை விஜய் மக்கள் இயக்கத்தினர்.
VMI - Vijay Makkal Iyakkam’s fantastic initiative - “#VilayillaVirunthagam” was taken to a whole level in the Chennai Rains.
Food packets where distributed for the needy with a Vehicle across the State. #Master #Beast @actorvijay pic.twitter.com/FXJiJk0WoD
கடந்த இரண்டு வருடங்களாக இவர்களின் பணி தொடர்ந்து வரும் நிலையில், சமீபத்தில் தென்சென்னையிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் ‘விஜய் விலையில்லா விருந்தகம்’ ஆரம்பித்து உணவளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக திருச்சி மற்றும் விருதாச்சலத்திலும் விஜய் விலையில்லா விருந்தகத்தை துவங்கி ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்