Published : 04,Nov 2021 09:09 AM

ரூ.12,000 கோடி மதிப்பிலான மானியத் திட்டம் - பாக். பிரதமர் இம்ரான் கான் அதிரடி அறிவிப்பு

Pakistan-Prime-Minister-Imran-Khan-has-announced-a-Rs-12000-crore-subsidy-scheme-to-benefit-the-poor-in-Pakistan
பாகிஸ்தானில் ஏழை மக்கள் பலன் பெறும் விதமாக 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மானியத் திட்டத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
 
இத்திட்டத்தின்படி கோதுமை மாவு, நெய், பருப்பு வகைகள் சந்தை விலையை விட 30 விழுக்காடு குறைவாக அடுத்த 6 மாதங்களுக்கு ஏழைகளுக்கு விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த அறிவிப்பை தொலைக்காட்சியில் வெளியிட்டு பேசிய பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் வரலாற்றிலேயே இது போன்ற நலத்திட்டம் அறிவிக்கப்பட்டதில்லை என தெரிவித்தார்.
 
image
தங்கள் அரசின் அறிவிப்பால் 2 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இம்ரான் கான் கூறினார். இது தவிர விவசாயம் மற்றும் வீடு கட்டுவதற்கு வட்டியில்லா வங்கிக் கடன் திட்டத்தையும் அவர் அறிவித்தார். விலைவாசி உயர்ந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இம்ரான் கான் இது போன்ற அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்