
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போதிய முன்னேற்பாடுகளை எடுப்பதற்காக 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம்.
தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகைதஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.