Published : 27,Oct 2021 06:59 PM
’மாமோய்.... அத்தான்’ - கலகலப்பூட்டும் ‘அண்ணாத்த’ ட்ரெய்லர்

நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது.
இதுவரை படத்தின் மூன்று பாடல்களும் டீசரும் வெளியான நிலையில் இன்று ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் மற்றுமொரு ‘முள்ளும் மலரும்’ படம் போல் அண்ணன் - தங்கை பாசக்கதை என்பதை உணர்த்துகிறது. அண்ணனாக ரஜினியும் பாசத்தங்கையாக கீர்த்தி சுரேஷும் அதகளப்படுத்துகிறார்கள்.
குஷ்பு ‘மாமோய்’... மீனா ‘அத்தான்’ என்று அழுத்தி சொல்லி கலகலப்பூட்டுகிறார்கள். ரஜினி, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, நயன்தாரா என அனைவரும் ரசிகர்களை அழகால் ஈர்க்கிறார்கள்.
பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு வில்லன்களாக நடிப்பில் மிரட்டுகிறார்கள். ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வைகளை தாண்டிச் செல்கிறது.