[X] Close

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு

Banks-must-join-hands-with-government-to-improve-people-s-livelihoods-MK-Stalin

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

மாநில வளர்ச்சியில் அரசுக்கும் வங்கிக்கும் இடையிலான கூட்டுறவை வலுப்படுத்தும் வகையில் வங்கியாளர்களை சந்தித்து முதலமைச்சர் உரையாற்றினார். சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் GSDPயுடன் நாட்டிலேயே 2வது பெரிய மாநிலப் பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளதாக அவர் குறிப்பிட்டார். பெண்களின் உயர்வுக்கு சுய உதவி குழு திட்டம் முக்கியமானது என கூறிய அவர், அந்த குழுக்கள் கடன்பெறுவதற்கு கள அளவிலான செயல்பாட்டாளர்களுக்கு வங்கிகள் தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

image


Advertisement

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்க மைக்ரோ கிரெடிட் திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பித்தவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கவனிக்குமாறு வங்கியாளர்களை முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அதுபோல வங்கிகளும் செயல்பட வேண்டும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

அனைத்து வங்கிகளும் சமுதாயத்தின் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். மீன்பிடி தொழிலுக்கும் கடன்களை வழங்க வேண்டும் என்றும் வங்கியாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதனைப்படிக்க...2வது அலைக்குப் பின் அதிக எண்ணிக்கையில் செயல்படும் தொழில் நிறுவனங்கள்: அதிகரித்த மின் தேவை! 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close