[X] Close

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்

Karthi-Chidambaram-can-be-arrested--Supreme-Court

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் முறைகேடு செய்ததற்கான ஆதாரம் இருந்தால் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக‌ அனுமதிக்க வேண்டும் என்ற கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் வருகின்ற 23 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிபிஐ முன் ஆஜராக கார்த்தி தயங்குவது ஏன்? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதனிடையே, முறைகேடு செய்ததற்கான ஆதாரம் இருந்தால் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close