[X] Close

விரைவுச் செய்திகள்: 100 கோடி தடுப்பூசி | கைதிகளுக்கு சலுகை | ஜப்பான் எரிமலை

உலகம்

Tamilnadu--India--World-news-till-12-PM

100 கோடி தடுப்பூசி - இந்தியா சாதனை: கொரோனா பாதிப்பை தடுக்க 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்திருக்கிறது. 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை 9 மாதங்களில் எட்டி வரலாறு படைத்திருக்கிறது.


Advertisement

பேருந்தில் இருந்து கீழே விழுந்து பெண் பலி: சங்கரன்கோவில் அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்தில் இருந்து இறங்க தயாரானபோது இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மீனவர்கள் 2ஆவது நாளாக போராட்டம்: இலங்கை கடற்படை விரட்டியதில் கடலில் மூழ்கி மீனவர் இறந்த சம்பவத்தில் நீதி கேட்டு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கோட்டைப்பட்டினத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.


Advertisement

நம்பர் பிளேட் வாசகங்கள் - போலீஸ் நடவடிக்கை: வாகன நம்பர் பிளேட்களில் தேவையற்ற வாசகங்கள் இடம்பெற்றால் நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவிட்டிருக்கிறார். விதிமீறல் புகாரில் சென்னையில் 1,892 பேர் மீது வழக்குப்பதிவு மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

கைதிகளுக்கு 'சலுகை' - 7 காவலர்கள் சஸ்பெண்ட்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியவர்களை உறவினர்கள் சந்திக்க அனுமதித்த விவகாரத்தில் விதிகளை மீறியதாக சேலம் மாநகர ஆயுதப்படை உதவி ஆய்வாளர் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

லடாக், இந்திய - சீன எல்லை: சீனாவை ஒட்டிய எல்லைகளில் விமானங்களை வீழ்த்தும் அதிநவீன ஏவுகணைகளை நிறுத்தியது இந்தியா. படைகளின் தயார் நிலை குறித்து ராணுவ, விமானப்படைத் தளபதிகள் அவ்வப்போது நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

உத்தராகண்ட் - பலி எண்ணிக்கை 50ஐ தாண்டியது: உத்தராகண்டில் மழை வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆனது. பாதிக்கப்பட்ட பகுதிகளில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

இன்னுயிர்நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம்: தமிழகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. மக்கள் பாதுகாப்புடன் வாழ, பணியின்போது இன்னுயிர் நீத்த காவல்துறையினருக்கு இன்று மரியாதை செலுத்தப்படுகிறது.

பட்டா கேட்டவர் தற்கொலை; விஏஓ சஸ்பெண்ட்: பட்டா வழங்க லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுவிட்டு, பூ வியாபாரி தற்கொலை செய்துகொண்டார். குற்றச்சாட்டுக்கு ஆளான கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

உ.பி.யில் அச்சத்துடன் வாழும் மக்கள் - பிரியங்கா: ஆக்ராவில் உயிரிழந்த விசாரணை கைதியின் குடும்பத்தினருக்கு பிரியங்கா ஆறுதல் தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தில் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை உள்ளதாக அவர் குற்றச்சாட்டியிருக்கிறார்.

ஆப்கனுக்கு உதவிகளை வழங்குகிறதா இந்தியா?: ஆப்கனுக்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக தலிபான்கள் தகவல் தெரிவித்திருக்கின்றனர். மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து இந்தியா எந்த விளக்கமும் தராததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எரிமலையில் இருந்து மீண்டும் சாம்பல் புகை: ஜப்பானில் எரிமலை மீண்டும் சாம்பல் புகையை வெளியேற்றி வருகிறது. மூன்றரை கிலோமீட்டர் உயரத்திற்கு புகை வெளியேறி வருவதால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

இரண்டாவது பயிற்சி ஆட்டத்திலும் இந்தியா வெற்றி: 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இரண்டாவது பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றிபெற்றது. ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


Advertisement

Advertisement
[X] Close