[X] Close

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளுகுளு இரண்டாம் சீசன்

தமிழ்நாடு

Chill-climate-second-season-started-in-Nilgiris

நீலகிரி மாவட்டத்தில் குளுமை பருவநிலை நிலவுவதால், அங்கு சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் திரண்டு வருகின்றனர்.


Advertisement

சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் தற்போது இரண்டாம் சீசன் நிலவுகிறது. நவராத்திரி, வார இறுதி என தொடர் விடுமுறையால் அம்மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குடும்பத்துடன் திரண்டு வருகின்றனர். உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைன் மரக்காடுகள், படகு இல்லம் உள்ளிட்டவற்றை ரசிக்கும் அவர்கள், குன்னூரில் உள்ள சிம்ஸ்பார்க், லேம்ஸ் ராக், டால்பின் நோஸ், கோத்தகிரியில் கோடநாடு காட்சிமுனை உள்ளிட்டவற்றையும் கண்டு ரசிக்க ஆர்வம் காட்டுகின்றனர். சுற்றுலாப்பயணிகள் வரத்து அதிகரித்துளளதால், உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பின் காரணமாக, கேரளா சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகிறது.

நாகை: சிபிசிஎல் நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு 


Advertisement


Advertisement

Advertisement
[X] Close