[X] Close

நீட் தொடர்பான தமிழக அரசின் அவசரச் சட்டம்: மத்திய அரசு விளக்கமளிக்க உத்தரவு

Emergency-Law-of-the-Government-of-Tamil-Nadu--The-Central-Government-has-been-asked-to-explain

நீட் தொடர்பான தமிழக அரசின் அவசரச் சட்டம் குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வை விரைந்து நடத்தக் கோரி மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவிகித இட ஒதுக்கீட்டை நிராகரித்து தீர்ப்பு வெளியான பின்னரும் கூட தமிழக அரசு மருத்துவக் கலந்தாய்வை தொடங்கவில்லை எனக் கூறியிருந்தார். அவசர வழக்காக உச்சநீதிமன்றம் இதனை இன்று விசாரித்தது.

விசாரணையில் தமிழக அரசு நீட் தொடர்பான விதிமுறைகளை பின்பற்றவில்லை என இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மருத்துவக் கலந்தாய்வை நடத்த தமிழக அரசுக்கு கூடுதல் அவகாசம் வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து பேசிய நீதிபதிகள், நீட் விலக்கிற்கான தமிழகத்தின் அவசரச் சட்ட முன்வரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டதா என கேள்வி எழுப்பினர். மேலும், நீட் தொடர்பாக தமிழக அரசின் அவசரச் சட்டம் குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.


Advertisement

முன்னதாக, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கும் அவசரச் சட்ட முன்வரைவுக்கு 3 மத்திய அமைச்சகங்கள் நேற்று மாலை ஒப்புதல் அளித்திருந்தன.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close