Published : 12,Oct 2021 09:21 PM
ஃபாலோயர்களுக்கு தெரியாமலே அவர்களை நீக்கலாம் : ட்விட்டரில் புதிய வசதி!

ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஒரு பயனரை பின்தொடர்ந்து வரும் ஃபாலோயர்களுக்கு தெரியாமலே அவர்களை நீக்கும் புதிய வசதி அறிமுகமாகி உள்ளது. இதற்காகவே புதிய ஆப்ஷன் ஒன்றை ட்விட்டர் களம் இறக்கியுள்ளது. ‘Soft Block’ என ட்விட்டர் இதனை சொல்லியுள்ளது.
ஒரு ஃபாலோயரை சாப்ட் பிளாக் செய்ய புரோபைல் > ஃபாலோயர்ஸ் > ஃபாலோயரின் பெயருக்கு பக்கத்தில் உள்ள மூன்று டாட்களை க்ளிக் செய்யவும் > அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனில் ‘Remove this Follower’ தேர்வு செய்தால் ஃபாலோயரை சாப்ட் பிளாக் செய்து விடலாம்.
இது ஒரு ஃபாலோயரை பிளாக் செய்வதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
பிரைவேட் ட்வீட்டை இதன் மூலம் உங்களது ஃபாலோயர்கள் மட்டுமே பார்க்க முடியும்.
மேலும் சில அறிவுறுத்தல் ஆப்ஷனை கொண்டு வரவும் ட்விட்டர் முடிவு செய்துள்ளதாம். தற்போது அதன் சோதனையை நடத்து வருகிறதாம் ட்விட்டர். இதன் மூலம் பயனர்கள் தேவையற்ற உரையாடல்களை (Conversations) தவிர்க்க முடியும் என ட்விட்டர் எதிர்பார்க்கிறதாம்.