[X] Close

“நாங்கள் வெற்றி பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்!” - ஆர்சிபி கேப்டன் கோலி

விளையாட்டு

We-are-only-focused-on-winning-the-game-says-Royal-Challengers-Bangalore-captain-Virat-Kohli-ahead-IPL-Eliminator-against-KKR

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, தங்கள் அணியின் நோக்கம் என்ன என்பது குறித்து விளக்கியுள்ளார். 

image

“நாம் விளையாடும் போது ஒன்று வெற்றி பெறுவோம். இல்லையென்றால் தோல்வியை தழுவுவோம். அந்த இரண்டையும் நாம் நினைத்து பார்க்கும் போது எதிர்மறையாக நிற்கின்ற தோல்வியை நோக்கியே நமது மனநிலை தானாக நகரும். ஆனால் எங்களது கவனம் எல்லாம் களத்தில் நாங்கள் அமைத்துள்ள வியூகங்களை செயல்படுத்தி, அதன் மூலம் வெற்றியை பெறுவது. அது மட்டுமே நமது ஒரே குறிக்கோளாக இருந்தால் நிச்சயம் நமது செயல்பாடு வேறு விதமாக இருக்கும். அது வெற்றியை நோக்கிய செயல்பாடாக இருக்கும். எங்கள் அணி தற்போது அதை சரியாக செய்ய வேண்டிய இடத்தில் உள்ளது. 


Advertisement

பைனலுக்குள் நுழைய நாங்கள் விளையாட வேண்டிய ஆட்டத்தை கணக்கு வைக்கவில்லை. வெற்றி பெறுவது எப்படி என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம்” என கோலி தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close