சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தை இயக்குநர் ஷங்கர், நடிகர் எஸ்.ஜே சூர்யா பாராட்டி இருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ’டாக்டர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடையும் என திரைத்துறையினர் கூறுகின்றனர். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு,தீபா உள்ளிட்ட பலரும் காமெடியான நடிப்பில் கவனம் ஈர்த்து பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடுவதோடு திரை பிரபலங்களும் ‘டாக்டர்‘ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள். இயக்குநர் ஷங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில், “டாக்டர் இந்த கொரோனா சூழலில் நமக்கு சிரிப்பு மருந்தைக் கொடுத்துள்ளது. அனைவரையும் சிரிக்கவைத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு வாழ்த்துகள். இந்த குடும்ப பொழுதுபோக்கு படத்தைக் கொடுத்ததற்காக சிவகார்த்திகேயன், அனிருத் உள்ளிட்ட மொத்தப் படக்குழுவிற்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
அவரைத்தொடர்ந்து, நடிகர் எஸ்.ஜே சூர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி இருக்கிறார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!