Published : 02,Oct 2021 06:15 PM
“அரசியலில் இருந்து விடை பெறுகிறேன்” - பிலிப்பைன்ஸ் அதிபர் அறிவிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே அரசியலில் இருந்து விடை பெறுவதாக தெரிவித்துள்ளார். அவருக்கு வயது 76. மக்களின் விருப்பத்தினை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“அரசியிலில் இருந்து நான் இன்றுடன் விடை பெறுகிறேன். என்னை இந்த அதிபர் பொறுப்பில் உட்கார வைத்த மக்களின் விருப்பத்தின் படி நான் தற்போது அரசியலில் இருந்து விலகுகிறேன். எப்போதும் மக்களின் விருப்பத்தை மதிப்பவன் நான்” என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டேவின் நகரை கூர்ந்து கவனித்து வரும் அரசியல் விமர்சகர்கள் ‘தனது மகளை அதிபர் பதவிக்கு கொண்டு வரும் நோக்கில் இதை அவர் செய்திருக்கலாம்’ என தெரிவித்துள்ளனர்.
அவரது மகள் சாரா, தற்போது டவாவோ நகர மேயராக பதவி வகித்து வருகிறார். தந்தையை தொடர்ந்து அதிபர் பதவிக்கு அவர் தேர்தலில் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது. ரோட்ரிகோ டுட்டெர்டேவும் தன்னை தொடர்ந்து தனது மகள் அந்த பொறுப்புக்கு வரலாம் என வாரிசு அரசியலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.