Published : 15,Aug 2017 06:28 AM

தோனியை பின்னுக்கு தள்ளினார் கோலி

Kohli-has-pushed-Dhoni-back

வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 7 தொடரில் வெற்றி பெற்று முன்னாள் கேப்டன் தோனியை பின்னுக்கு தள்ளினார் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் கோலி.

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. இலங்கையில் நடைபெற்ற இந்தப்போடியில் வெற்றி பெற்றதன் மூலம் வெளிநாடுகளில் இந்திய அணி கேப்டன்கள் பெற்ற வெற்றியில் தோனியை பின்னுக்கு தள்ளினார் விராட் கோலி. ஆம்! தோனி தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளில் 6 டெஸ்ட் தொடரில் வென்றுள்ளது. தற்போது இலங்கை அணியை 3-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் கோலி தலைமையிலான இந்திய அணி வெளிநாடுகளில் 7 டெஸ்ட் தொடரில் வென்றுள்ளது.

இந்தப்பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி முதலிடத்தை பிடித்துள்ளார். சவுரவ் கங்குலி தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளில் 11 டெஸ்ட் தொடரில் வென்றுள்ளது. தற்போது தோனியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ள விராட் கோலி சவுரவ் கங்குலியை வீழ்த்தி முதலிடத்தை பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்