Published : 15,Aug 2017 03:01 AM

கிரெடிட் கார்டு மூலம் ரூ.5 லட்சம் மோசடி

Rs-5-lakh-robbery-through-credit-card

கோவையில் தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவரின் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி இணையதளம் மூலம் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

கோவை ஈச்சனாரி பகுதியை சேர்ந்த தனியார் மென்பொருள் நிறுவனத்தின் மேலாளாளர் மணிகண்டன். கடந்த சனிக்கிழமை இரவு அவரது கிரெடிட் கார்டை பயன்படுத்தி 5 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதாக, அவரது கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

உடனடியாக கிரெடிட் கார்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்த அவர், இன்று கோவை சைபர் க்ரைம் காவல்துறையிடம் மனு அளித்துள்ளார். அதில், 40 நிமிடங்களில் 69 பரிவர்த்தனைகள் மூலம் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மணிகண்டன் குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்