Published : 24,Sep 2021 01:45 PM

’பீஸ்ட்’ டெல்லி படப்பிடிப்பு நிறைவு: சென்னை திரும்பிய விஜய்

Delhi-shooting-of-Actor-Vijay-Beast-is-wrapped

’பீஸ்ட்’ திரைப்படத்தின் டெல்லி படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் 'பீஸ்ட்' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும், இம்மாத துவக்கத்தில் நான்காம் கட்டப் படப்பிடிப்பை சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட அரங்கில் நடத்தினர் படக்குழுவினர்.

image

இதை முடித்துக்கொண்டு சண்டைக் காட்சிக்காக படக்குழுவினர் கடந்தவாரம் டெல்லி சென்றனர். அங்கு 5 நாட்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது டெல்லி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனால், படக்குழுவினர் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ளனர். நடிகர் விஜய் சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்