[X] Close

உலகம்: 22.72 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ்

Coronavirus-Cases-Deaths-Recovered-in-world
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 72 லட்சத்து 19 ஆயிரத்து 975 ஆக அதிகரித்துள்ளது.
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 560,446 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 72 லட்சத்து 19 ஆயிரத்து 975 ஆக அதிகரித்துள்ளது. எனினும் 20 கோடியே 39 லட்சத்து 4,001 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனனர். 46 லட்சத்து 72 ஆயிரத்து 346 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 1 கோடியே 86 லட்சத்து 43 ஆயிரத்து 628 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 
image
கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கும் முதல் 10 நாடுகளின் வரிசையில், அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாமிடத்திலும் பிரேசில் மூன்றாமிடத்திலும் உள்ளன. அமெரிக்காவில் கொரோனா தொற்று புதிய உச்சம் தொட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 163,821 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,270 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் புதிதாக 30,361 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 432 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
Related Tags : CORONAVIRUSகொரோனா

Advertisement

Advertisement
[X] Close