[X] Close

விற்பனையாகும் அரசு பங்குகள்: ஏலத்தை அறிவித்தது மத்திய அரசு

வணிகம்

Government-shares-to-be-sold-for-Rupees-3000-crore-and-Auction-date-announced-by-Union-Government

அரசின் பங்குகளை தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


Advertisement

அதன்படி, வரும் 2023-ஆம் ஆண்டு, அரசு பங்கில் 4.26 சதவீதத்தை 3000 கோடி ரூபாய்க்கும், 2031-ஆம் ஆண்டு அரசு பங்கில் 6.10 சதவீதத்தை 14,000 கோடி ரூபாய்க்கும், 2061-ஆம் ஆண்டு அரசு பங்கில் 6.76 சதவீதத்தை 9000 கோடி ரூபாய்க்கும் ஏலம் விடுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

image


Advertisement

ரிசர்வ் வங்கி நடத்தும் இந்த ஏலமானது மும்பையில் ரிசர்வ் வங்கியால் செப்டம்பர் 17-ஆம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட பங்கு விற்பனையில் 5 சதவீதம் வரை தகுதியான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு போட்டியில்லா ஏல முறை திட்டப்படி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி மற்றும் போட்டியற்ற ஏலங்களை ரிசர்வ் வங்கியின் இ-கியூபர் அமைப்பில் மின்னணு முறையில் செப்டம்பர் 17ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலங்களின் முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும். வெற்றிகரமாக ஏலம் எடுத்தவர்கள் அதற்கான கட்டணத்தை செப்டம்பர் 20ம் தேதி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

தகவல் : PIB

இதையும் படிக்கலாம் : டோக்கியோ ஒலிம்பிக்கின் இந்திய ஈட்டி எறிதல் பயிற்சியாளர் நீக்கம் -  விமர்சித்தது காரணமா? 


Advertisement

Advertisement
[X] Close