[X] Close

நீட் தேர்வு விவகாரம்: இரண்டு மாணவர்களின் உயிரிழப்புக்கு திமுகவே பொறுப்பு - அண்ணாமலை சாடல்

தமிழ்நாடு

NEET-Exam-DMK-is-responsible-for-the-deaths-of-two-students-Annamalai

நீட் தேர்வுக்கு உரிய பயிற்சி அளிக்காமல் தேர்வு நடைபெறாது எனக்கூறி படிக்க வேண்டாம் என்று மாணவர்களை திசை திருப்பிய தி.மு.க தான் தற்போதைய இரண்டு மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.


Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றநு. இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும் போது, “கடந்த 2014 வரை காங்கிரஸ், இலங்கையுடனான உறவால் இலங்கை தமிழர்கள் பாதிக்கபட்டனர். மீனவர்கள் மீதான தாக்குதல் என்பது அன்றாட நிகழ்வாக இருந்தது. தற்போதைய ஆட்சியில் ஒரே ஒரு நிகழ்வுதான் நடைபெற்றது. அதனையும் மத்திய அரசு கவனித்துள்ளது. தமிழக மீனவர்கள் 7 ஆண்டுகளாக பாதுகாப்பாக உள்ளனர்.

image


Advertisement

நீட் தேர்வு பயத்தால் 15 மாணவ செல்வங்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இது மிகப்பெரிய வருத்தமாக உள்ளது. தயவு செய்து மாணவர்கள் இதுபோன்ற தவறான முடிவை மேற்கொள்ளாதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் நீட்தேர்வை வைத்து அரசியல் செய்து மாணவர்களின் உணர்ச்சிகளை தூண்டி இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளனர். இது போன்ற அரசியலை ஒரு போதும் மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள்.

நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து நீங்க படிக்காதீங்க படிக்காதீங்கனு சொல்லி மாணவர்களை ஏமாற்றினார்கள். அப்போதே நாங்கள் கூறினோம் மாணவர்களை திசை திருப்பாதீர்கள் என. ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர், நான் பேசியதை வைத்து காமெடி செய்தார். கல்வித்துறை அமைச்சர் டெல்லியில் மனு கொடுத்து விட்டோம் நீட் தேர்வு வராது எனக்கூறி மாணவர்களை படிக்காமல் இருக்க காரணமாகிவிட்டார்.

நாங்கள் அப்போதும் கூறினோம் உச்சநீதிமன்றத்தில் உறுதியாக்கப்பட்ட சட்டத்தை யாராலும் தடை செய்ய முடியாது. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை பற்றிய புரிதல் இல்லாமல் கூட முதல்வர் ஸ்டாலின் பேசிவருகிறார் நீட் தேர்வு வந்த பின்னர்தான் ஏழை மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆக முடிந்துள்ளது. அனைவருக்கும் சமமான நீட் தேர்வை ஏதோ பூதம் போன்று உருவகப்படுத்தி அரசில் நோக்கத்திற்காக தவறாக சித்தரித்து தி.மு.க அரசியல் செய்துள்ளது.


Advertisement

image

கடந்த ஆண்டு சிறந்த மாணவர்களை தமிழகம் நீட்தேர்வில் பெற்ற நிலையில், தற்போதைய அரசு மாணவர்களுக்கு போதிய பயிற்சியை வழங்காமலும் படிக்க வேண்டாம் என கூறியும் திடீரென நீட் தேர்வை எழுதுங்கள் எனவும் மாற்றி மாற்றி பேசியதால் மன அழுத்தாத்திலே இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மாணவர்களின் இழப்புக்கு திமுகவே பொறுப்பேற்க வேண்டும்.

தமிழக கவர்னரை மக்களும் முதல்வருமே வரவேற்றுள்ளனர். ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி கவர்னரை பார்த்து அஞ்சுவது ஏன் அவர் எதையோ மறைப்பது போல் தெரிகிறது. கவர்னரை எதிர்ப்பவர்கள் முதலில் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்று பேசினார்.


Advertisement

Advertisement
[X] Close