[X] Close

பிரதமரை சந்திக்க முடியாத சூழல்: ஷீரடி புறப்பட்டார் ஓபிஎஸ்

OPS-goes-to-Shirdi

குடியரசுத் துணைத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றிருந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் ஆகியோர் டெல்லியிலிருந்து ஷீரடி புறப்பட்டுச் சென்றனர்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மற்றும் பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க அவர்கள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கான சூழல் அமையவில்லை. தவிர, இரட்டை இலை சின்ன விவகாரம் குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவை எதுவும் நடைபெறாததால் ஓ.பன்னீர்செல்வம், மைத்ரேயன் ஆகிய இருவரும் டெல்லியிலிருந்து ஷீரடி புறப்பட்டனர். அதேவேளையில், அமித் ஷா சென்னை வரும் போது அவரை சந்தித்துப் பேச ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close