[X] Close

ஓவல் டெஸ்டில் இந்தியா அசத்தல் வெற்றி! பந்து வீச்சில் பட்டையை கிளப்பிய பவுலர்கள்!

சிறப்புக் களம்

India-registered-Thumping-Victory-at-The-Oval-Ground-Against-England-by-winning-the-Test-Match-in-157-Runs-Margin

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அசைக்க முடியாத வெற்றியை பதிவு செய்துள்ளது. டாசை இழந்தது, முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களை எடுத்தது, 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது என இந்த போட்டியில் இந்தியாவுக்கு சில மைனஸ்கள் இருந்தன. 


Advertisement

image

ஆனால் அதையெல்லாம் தூக்கி தூரப் போடும் அளவும் அமைந்தது இரண்டாவது இன்னிங்ஸ். இந்தியா பேட்டிங்கில் மாஸ் காட்ட 466 ரன்களை குவித்து ஆல் அவுட்டாகியது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் பந்து வீசி களைப்படைந்திருந்தனர் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள். 


Advertisement

ஒரு வழியாக இந்தியாவின் அனைத்து விக்கெட்டுகளையும் காலி செய்தது இங்கிலாந்து. 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 

image

சிறப்பான தொடக்கம்!


Advertisement

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பெர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீது சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் தங்களது விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களை சேர்த்து அசத்தினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி தடுமாறியது ஓப்பனிங்கில் தான் என்ற விமர்சனத்துக்கு இந்த தொடரில் பேர்ன்ஸ் - ஹமீது முற்றுப் புள்ளி வைத்தனர். 

image

முதல் ஓவரில் விக்கெட்டை வீழ்த்திய தாக்கூர்!

மற்ற இந்திய பவுலர்களால் தகர்க்க முடியாத பேர்ன்ஸ் - ஹமீது கூட்டணியை முதல் ஓவரிலேயே தகர்த்தார் தாக்கூர். இந்த ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு முதல் காரணம் தாக்கூரின் பங்களிப்பு எனவும் சொல்லலாம். களத்தில் அரைசதம் கடந்து ‘ரோர்’ (Roar) செய்து கொண்டிருந்த பேர்ன்ஸை வெளியேற்றினார். 

image

திருப்புமுனையை கொடுத்த ரன்-அவுட்!

இங்கிலாந்தின் பலமே டாப் ஆர்டர் தான். பேர்ன்ஸ், ஹமீது, மலான், ரூட். இதில் பேட்டிங் லைன் அப்பில் மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கினார் மலான். இருப்பினும் ஹமீதின் அழைப்புக்கு ரெஸ்பாண்ட் செய்த அவர் ஸ்ட்ரைக்கர் எண்டில் ரன்-அவுட்டாகி வெளியேறினார். அது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 

ஹமீதை போல்ட் செய்த ஜடேஜா!

வலுவாக ஆட்டத்தில் செட்டாகி விளையாடிக் கொண்டிருந்த ஹசீப் ஹமீதை போல்ட் செய்து வெளியேற்றினார் ஜடேஜா. 193 பந்துகளுக்கு 63 ரன்களை எடுத்து நடையைக் கட்டினார் ஹமீது. 

image

100 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பும்ரா!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதுவும் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடிய ஆலி போப்பை போல்ட் செய்தார். தொடர்ந்து அடுத்த ஓவரில் பேர்ஸ்டோவையும் வீழ்த்தினார். 

ஜடேஜா, மொயின் அலியை ‘டக்’ அவுட் செய்தார். 

ரூட்டின் ஸ்டெம்பை தகர்த்த தாக்கூர்!

இங்கிலாந்து அணியின் ஆணிவேரான கேப்டன் ஜோ ரூட்டை ஸ்டெம்புகளை தகர்த்து வெளியேற்றினார் தாக்கூர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரூட் முதல் நிலையில் உள்ள பேட்ஸ்மேன். அவரது விக்கெட் இந்தியாவின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தது. 

image

பின்னர் வந்த வோக்ஸ், ஓவர்டன் மற்றும் பேட்ஸ்மேன்களை இந்திய பந்து வீச்சாளர்கள் காலி செய்தனர். 

இந்த போட்டியில் உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா, பும்ரா, தாக்கூர் என மூவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். முடிவில் இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 1 என முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த போட்டி வரும் வெள்ளிக்கிழமை அன்று ஓல்டு டிராவோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெற்றாலோ அல்லது ஆட்டதை சமன் செய்தாலோ தொடரை இந்தியா கைப்பற்றும்.


Advertisement

Advertisement
[X] Close