[X] Close

ஒரு குடும்பம் ஒரு குழந்தை திட்டம் - சாதக பாதகம் என்ன?

சிறப்புக் களம்

explain-merits-and-demerits-of-one-child-policy

ஒரு குடும்பம் ஒரு குழந்தை திட்டத்தை இந்தியாவில் கொண்டுவரப் பிரதமரிடம் அறிவுறுத்தப்படும் எனக் கருத்து தெரிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே. அதுபற்றிய முழு விபரங்களைக் காண்போம்


Advertisement

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்குக் கட்டுப்பாடுகள் உண்டு. பல ஆண்டுகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதி இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகமானது. வெகுவாக குறைந்திருக்கும் பிறப்பு விகிதத்தை மீண்டும் அதிகரிக்க, குழந்தைகள் பெறும் எண்ணிக்கையை இரண்டு, மூன்று எனக் கூடியிருக்கிறது சீனா.

உலகளவில் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும் எனச் சொல்லும் எவ்வித சட்டமும் இதுவரையில் இல்லை. இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ளுங்கள் என வலியுறுத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பன போன்ற நடவடிக்கைகளில் மட்டுமே பல ஆண்டுகளாக அரசு ஈடுபடுகிறது.


Advertisement

image

இந்நிலையில், இந்தியக் குடியரசு கட்சியின் தலைவரும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ஒரு குடும்பம் ஒரு குழந்தை திட்டத்தை உறுதி செய்யும் மசோதாவைக் கொண்டுவரப் பிரதமரிடம் விரைவில் கோரிக்கை வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார். மேலும், 'ஒரு குழந்தை கொள்கையை' இந்தியக் குடியரசு கட்சி ஆதரிப்பதாகவும், இந்த கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம் மக்கள்தொகையைக் குறைக்க முடியும் என்றும் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.


Advertisement

இதற்கான மசோதாவைக் கொண்டு வரவேண்டி எழுத்துப்பூர்வ கோரிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், கட்சி சார்பில் இதற்கான சட்ட முன்வடிவு பிரதமரிடம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

image

2016ஆம் ஆண்டு, நாடாளுமன்ற உறுப்பினர் பிரகலாத் சிங் பட்டேல் இதே மசோதாவைக் கொண்டு வந்தார். ஆனால் பலரின் எதிர்ப்பின் காரணமாக இந்த மசோதா அப்போது வாக்கெடுப்புக்குக் கூட வராமல் போனது குறிப்பிடத்தக்கது.

image


இந்த காலாண்டின் இறுதியில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு விகிதம் 59.00 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில், அமெரிக்காவின் வேலைவாய்ப்பு விகிதம் 2022 ஆம் ஆண்டில் 61.00 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை எவ்வளவு?

உலகில் 8 நொடிக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. 12 நொடிகளுக்கு ஒரு நபர் உயிரிழக்கிறார். உலக அளவில் 789 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இதில் சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. சீனாவில் 144.42 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இந்தியாவில் 139.34 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர்.
உலக மக்கள் தொகையில் 17.9% பேர் சீனாவை சேர்ந்தவர்கள். இந்தியாவில் உலக மக்கள் தொகையில் 17.5% பேர் உள்ளனர். 3ஆவது இடத்திலுள்ள அமெரிக்காவின் மக்கள் தொகை- 4.21%

இது தொடர்பாக பொருளாதார ஆலோசகர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ''சீனாவில் குடும்பத்துக்குள் மூக்கை நுழைத்து ஒரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளகூடாது என உத்தரவிட்டது. தற்போது முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், வாங்கும் திறன் குறையும், பொருளாதார வளர்ச்சி குறையும் என்ற அபாயத்தை உணர்ந்து சீனாவில் அந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இது சட்டமாக இல்லாமல், விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். பின்பற்றுபவர்களுக்கு ஊக்கமாக எதையாவது செய்ய வேண்டும். அப்படி செய்தால் பலரும் முன்வருவார்கள். கிராம புறங்களில் குடும்பங்கள் விரிவடைந்துகொண்டே செல்வதை பார்க்கிறோம். ஒழுங்குமுறை தேவைதான். மத்திய, மாநில அரசுகள் இணைந்து சம்பந்தப்பட்ட மாநிலங்களை கண்டறிந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.


Advertisement

Advertisement
[X] Close