Published : 03,Sep 2021 03:15 PM
புனே: அட்லீ -ஷாருக்கான் படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா

புனேவில் இன்று தொடங்கிய ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தின் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா இணைந்திருக்கிறார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கும் அட்லீ கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா, ‘தங்கல்’ புகழ் சான்யா மல்ஹோத்ரா நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தொடங்கவிருக்கிறது. படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகை நயன்தாரா மற்றும் நடிகை ப்ரியா மணி புனே சென்றிருக்கிறார். இருவரும் புனேவில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.