Published : 31,Aug 2021 01:44 PM

இந்தியாவில் 2வது நாளாக குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு

corona-daily-positive-cases-update

இந்தியாவில் புதிய தினசரி தொற்றுகள் எண்ணிக்கை தொடர்ந்து 2ஆவது நாளாக குறைந்துள்ளது

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,941 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது நேற்று 42,909 ஆக இருந்தது. கொரோனாவால் நாடெங்கும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 3,76,324 ஆக இருந்த நிலையில், அது இன்று 3,70,640 ஆக குறைந்துள்ளது.

image

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை நேற்று 34,763 ஆக இருந்த நிலையில், அது இன்று 36,275 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பதிவான தினசரி இறப்புகள் எண்ணிக்கை நேற்று 380 ஆக இருந்த நிலையில் இன்று அது 350 ஆக குறைந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்