[X] Close

சீனாவில் 18 வயதுக்கு கீழுள்ள சிறார்கள் ஆன்லைன் கேம் விளையாட நூதன தடை

டெக்னாலஜி

China-has-imposed-a-new-ban-on-children-under-the-age-of-18-from-playing-online-games

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து வயதினர் இடத்திலும் ஆன்லைன் கேம்களுக்கு பலத்த வரவேற்பு இருப்பதுண்டு. அந்த வகையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் அதற்கு விதி விலக்கல்ல. உணவு, உறக்கம் என அனைத்தையும் மறந்து சர்வ காலமும் அதில் அவர்கள் மூழ்கி போவதும் உண்டு.


Advertisement

இந்நிலையில் 18 வயதுக்கு கீழுள்ள சிறார்கள் ஆன்லைன் கேம் விளையாட நூதன தடை விதித்துள்ளது சீனா. 

image


Advertisement

அதென்ன?

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஒரு நாளில் ஒரு மணி நேரம் மட்டும் தான் ஆன்லைன் கேம் விளையாட முடியும். அதற்கு மேல் அவர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் சில கட்டுப்பாடுகளும் அமல் படுத்தப்பட்டுள்ளன. அதாவது இரவு 8 முதல் 9 மணி வரையில் மட்டுமே விளையாட வேண்டும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறை நாட்களில் மட்டுமே விளையாட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பயனர்கள் அனைவரும் தங்களது அசல் விவரங்களை கொடுத்து தான் பதிவு செய்துள்ளனரா என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்பது அந்த கட்டுப்பாடுகளில் ஒன்று. 


Advertisement

இதையும் வாசிக்கலாமே : பாராலிம்பிக்கில் திரும்ப பெறப்பட்ட இந்திய வீரர் வினோத் குமாரின் பதக்கம்.. காரணம் என்ன? 


Advertisement

Advertisement
[X] Close