[X] Close

’ஏசி, பிரிட்ஜ்..’ - எலெக்ட்ரிகல் பொருள்கள் உற்பத்தியில் களம் இறங்கும் ரிலையன்ஸ் ரீடெய்ல்

வணிகம்

Reliance-Retail-will-produce-BPL-and-Kelvinator-Products

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் பிபிஎல் (BPL) மற்றும் கெல்வினேட்டர் (Kelvinator) பொருட்களை தயாரிப்பதற்கான அனுமதியை வாங்கியிருக்கிறது. இதன் மூலம் எலெக்ட்ரிகல் பொருள்கள் பிரிவில் களம் இறங்குகிறது ரிலையன்ஸ் ரீடெய்ல்.


Advertisement

image

பிபிஎல் நிறுவனத்தின் பொருட்களை தயாரிப்பது மற்றும் விற்பனையை ரிலையன்ஸ் செய்யும். ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் டிவியை உற்பத்தி செய்து விற்பனை செய்யும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடைகள் மற்றும் இணையதளத்தில் இந்தப் பொருள்களை வாங்க முடியும். இதுதவிர, மற்ற எலெக்ட்ரான்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளிலும் இந்தப் பொருள்களை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும் என தெரிகிறது. வரும் விழாக் காலத்துக்கு முன்பாக இந்த விற்பனை தொடங்கும் என தெரிகிறது.


Advertisement

கெல்வினேட்டருடன் ஏற்கெனவெ ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், பிபிஎல் நிறுவனத்துடன் விரைவில் ஒப்பந்தம் செய்யப்படும் என்றும் தெரிகிறது.


Advertisement

Advertisement
[X] Close