[X] Close

மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர்களுடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சந்திப்பு

இந்தியா

Mekedatu-issue-Karnataka-Chief-Minister-met-with-Union-Water-Resources-Minister-in-New-Delhi

தலைநகர் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 


Advertisement

குறிப்பாக மேகதாது அணை கட்ட அனுமதி தொடர்பாகவும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பில் கர்நாடக மாநிலத்தின் நீர்வளம் சார்ந்த திட்டங்கள், பிரச்னைகள் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.  

மத்திய வேளாண் துறை அமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர் என இரண்டு மத்திய அமைச்சர்களை அவர் சந்தித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக அவர் டெல்லி சென்ற அவர், பிரதமர் மோடியை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close