[X] Close

சீர்காழி: லாரி உரசியதால் அறுந்து விழுந்த மின்கம்பி - முதியவர், இளைஞர் பரிதாப உயிரிழப்பு

வீடியோ ஸ்டோரி

சீர்காழி அருகே லாரி உரசியதால் அறுந்து கிடந்த மின் வயரில் சிக்கி முதியவரும் அவரை காப்பாற்ற காப்பாற்ற முயன்ற இளைஞரும் உயிரிழந்தனர்.

குளங்கரை என்ற இடத்தில், அதிவேகமாக சென்ற லாரி உரசியதால், அப்பகுதியில் இருந்த மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்தது. அந்த வழியே சென்ற சிங்காரவேல் என்ற 65 வயது முதியவர் மீது அந்த மின்கம்பி விழ, அவர் மின்சாரம் தாக்கி துடித்துள்ளார். அப்போது அவரை காப்பாற்ற முயன்ற இளைஞரையும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே அசைவற்று விழுந்தனர்.

image


Advertisement

அக்கம்பக்கத்தினர் வந்து மின் இணைப்பைத் துண்டித்து, இருவரையும் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரியை யாரும் இல்லாத இடத்தில் நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் தப்பியோடியுள்ளார். இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஓட்டுநரை தேடிவருகிறார்கள்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close