[X] Close

’அனைத்தும் சாத்தியமே’ - அஸ்வின் விளையாடுவது குறித்த கேள்விக்கு கோலி பதில்

விளையாட்டு

Indian-Skipper-Virat-Kohli-on-adding-Ravichandran-Ashwin-in-Playing-Eleven-against-England-at-Leeds-test-match-says-Anything-is-possible

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக நாளை (ஆகஸ்ட் 25) லீட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் விராட் கோலியிடம் ‘அஸ்வின் விளையாடுவது சாத்தியமா?’ என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அனைத்தும் சாத்தியமே என கோலி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

image

“இந்த ஆடுகளம் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிக புற்கள் இருக்கும் என நினைத்தேன். ஆடும் லெவனை பொறுத்தவரை எது வேண்டுமானாலும் சாத்தியமாகலாம். இப்போதைக்கு இது தான் என சொல்ல முடியவில்லை. ஆடுகளத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது நாளின் தன்மை எப்படி இருக்கும் என முன்கூட்டியே பார்க்க வேண்டியுள்ளது. அதை வைத்து ஆடும் லெவனை அறிவிப்போம். 


Advertisement

லார்ட்ஸ் டெஸ்டில் வென்ற வெற்றிக் கூட்டணியை மாற்ற விருப்பமில்லை. இருந்தாலும் எது வேண்டுமானாலும் சாத்தியமாகலாம்” என தெரிவித்துள்ளார். 

ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான ரேங்கிங்கில் அஸ்வின் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை. 


Advertisement

Advertisement
[X] Close