[X] Close

வாணியம்பாடி: போதையில் மனைவியின் மண்டையை உடைத்து வீட்டுக்கு தீ வைத்த கணவர்

குற்றம்,தமிழ்நாடு

Police-searching-for-a-husband-who-broke-his-wife-s-skull-while-intoxicated-and-set-the-house-on-fire

வாணியம்பாடியில் போதையில் மனைவியின் மண்டையை உடைத்து வீட்டுக்கு தீ வைத்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 ஆண், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். கட்டிட மேஸ்திரியான சங்கர், தொடர்ந்து குடித்துவிட்டு மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்துள்ளார்

இந்நிலையில் இன்று குடித்துவிட்டு வந்து மனைவியுடம் தகராறில் ஈடுபட்டபோது வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையால் விஜயலட்சுமியின் மண்டையை உடைத்துள்ளார். உடனடியாக அப்பகுதி மக்கள் விஜயலட்சுமி மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.


Advertisement

image

பின்னர் குடிபோதையில் இருந்த சங்கர், அப்பகுதி மக்களிடையே தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்ற அவர் வீட்டில் உள்ள பொருட்களை தீவைத்து எரித்துள்ளார். இதனால் வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்த நிலையில், அப்பகுதி மக்கள் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி தீயணைப்புத் துறையினர் சுமார் 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சங்கரை தேடி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close