Published : 16,Aug 2021 01:20 PM

மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியிலிருந்து விலகல்

Mahila-Congress-chief-Sushmita-Dev-quits-party--to-join-trinamool-congress

முன்னாள்காங்கிரஸ்எம்.பி.யும், மகிளாகாங்கிரஸின்தலைவருமானசுஷ்மிதாதேவ்கட்சியில்இருந்துவிலகுவதாக அறிவித்திருக்கிறார். அவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுஷ்மிதாதேவ்தனதுராஜினாமாகடிதத்தைகாங்கிரஸ்தலைவர்சோனியாகாந்தியிடம்அளித்துள்ளார். சுஷ்மிதாதேவின்கடிதத்தில் காங்கிரஸ்கட்சியைவிட்டுவெளியேறுவதற்குஎந்தகாரணத்தையும்தெரிவிக்கவில்லை. பொதுசேவையின்ஒருபுதியஅத்தியாயத்தைத்தொடங்கவுள்ளதாக மட்டும்தெரிவித்திருக்கிறார். அவர்தனதுட்விட்டர்பயோவில்  “காங்கிரஸின்முன்னாள்உறுப்பினர்" என்றுமாற்றியுள்ளார்.

சுஷ்மிதா தேவ், அசாமில் ஏழுமுறைநாடாளுமன்ற உறுப்பினராக இருந்தசந்தோஷ்மோகன்தேவின்மகள்ஆவார். இவர் அசாமில்வங்காளமொழிபேசும்பராக்பள்ளத்தாக்கில்காங்கிரஸின்முகமாககருதப்பட்டார். சுஷ்மிதாதேவ்பாஜகவில்சேருவதுபற்றியயூகங்களைபாஜகமறுத்துள்ளது. இந்த சூழலில் சுஷ்மிதாமேற்குவங்கமுதல்வர்மம்தாபானர்ஜி மற்றும் அவரின் மருமகன் அபிஷேக் பானர்ஜியை சந்திக்க  கொல்கத்தாசெல்கிறார். அவர் திரிணாமூல் காங்கிரஸில் இணைவார் என்று கூறப்படுகிறது. அசாமில் திரிணாமூல் காங்கிரஸின் முகமாக சுஷ்மிதா இருப்பார் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்