[X] Close

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட ஆசியர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்வு

உலகம்

US-population-rises-to-33-1-crore--Number-of-Asians-rises-rapidly

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட ஆசியர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதும் அதற்கு மாறாக வெள்ளையின மக்கள் எண்ணிக்கை குறைவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.


Advertisement

அமெரிக்காவில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் விரிவான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் அமெரிக்க மக்கள் தொகை 33 கோடியே 10 லட்சம் என்றும் இது முன்னர் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் 7.4% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 1776ஆம் ஆண்டிற்கு பின் வெள்ளையின மக்கள் எண்ணிக்கை முதன் முதலாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் உள்ளிட்ட ஆசியர்கள் எண்ணிக்கை 2 கோடியாக அதிகரித்திருப்பதாகவும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வேறு எந்த கண்டத்தினரையும் விட ஆசியர்கள் எண்ணிக்கைதான் வேகமாக அதிகரித்து வருவதாகவும் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close