[X] Close

சென்னையில் மீண்டும் தலைதூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்

backfiring-gun-culture-in-Chennai

சென்னை திருவல்லிக்கேணியில் துப்பாக்கி விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  


Advertisement

திருவல்லிக்கேணி வாலாஜா சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் துப்பாக்கியுடன் சிலர் தங்கியிருப்பதாக குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், ஓட்டலில் உள்ள ஒரு அறையில் சந்தேகமளிக்கும் வகையில் தங்கியிருந்த 4 பேரிடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் பிஸ்டல் ரக துப்பாக்கி, குண்டுகளுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அவர்கள் 4 பேரையும் பிடித்து திருவல்லிக்கேணி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் வியாசர்பாடியைச் சேர்ந்த கோபிநாத், மதுராந்தகத்தைச் சேர்ந்த குமார், பிரகாஷ் மற்றும் அண்ணா நகரைச் சேர்ந்த முருகன் என்றும், துப்பாக்கியை விற்க அவர்கள் சென்னை வந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close