[X] Close

18 வயதுக்கு கீழுள்ள பயனர்களுக்கு புதிய கொள்கையை அமலுக்கு கொண்டு வரும் கூகுள்

டெக்னாலஜி

Google-is-about-to-implement-a-new-policy-for-users-under-the-age-of-18

டெக்னாலஜி உலகின் சாம்ராட்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் 18 வயதுக்கு கீழுள்ள பயனர்களுக்கு புதிய கொள்கையை அமலுக்கு கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்த கொள்கைகள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

image

கொரோனா பேரிடர் சூழலினால் பெரும்பாலான உலக மக்களிடையே டிஜிட்டல் கேட்ஜெட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குழந்தைகள், சிறார்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் அவர்களது பணியை அந்த கேட்ஜெட்களின் துணை கொண்டே செய்து வருகின்றனர். 


Advertisement

குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் கல்வி சார்ந்த தேவைக்களுக்காக மாணவர்கள் அதிகளவில் இந்த கேட்ஜெட்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் எந்தளவுக்கு சாதகம் உள்ளதோ, அதே அளவுக்கு பாதகம் இருப்பதாகவும் குழந்தைகள் மற்றும் சிறார்கள் நலன் சார்ந்த ஆர்வலர்கள், பெற்றோர்களை கவலை கொள்ள வைத்துள்ளது. 

அது தொடர்பாக உலக நாடுகள் சிலவும் குழந்தைகள் இந்த கேட்ஜெட்களை பயன்படுத்துவது தொடர்பாக சில ஒழுங்கு முறைகளும் அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில் கூகுள் தானாகவே முன்வந்து 18 வயதுக்கு கீழுள்ள பயனர்களுக்கு புதிய கொள்கையை அமலுக்கு கொண்டு வர உள்ளது. 

“வடிவமைப்பில் தனித்துவம், பாதுகாப்பான பயன்பாடு, பிரைவசி மற்றும் பயனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் புராடெக்ட்களை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். கூகுளில் 13 வயதுக்கு கீழுள்ளவர்கள் நிலையான கணக்கை உருவாக்க முடியாது. இருப்பினும் தற்போது 18 வயதுக்கு கீழுள்ள பயனர்களுக்கென சில கொள்கையை கொண்டு வர உள்ளோம். 


Advertisement

image

குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பதின் பருவ வயதினரின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு இந்த கொள்கையை கொண்டு வர உள்ளோம். இதன் மூலம் கூகுள் சேர்ச் ரிசல்டில் தேடினால் கிடைக்கும் தங்களது படங்களை அகற்ற கோரும் ரெக்வஸ்ட் ஆப்ஷனை 18 வயதுக்கு கீழ் உள்ள எவரேனும் எங்களை அணுகலாம். அவர்கள் மட்டுமல்லாது அவர்களது பெற்றோர்களும் இதற்காக அணுகலாம். இதன் மூலம் இளம் பிள்ளைகள் தங்களது இமேஜை கண்ட்ரோல் செய்ய முடியும் என கருதுகிறோம். இருப்பினும் இது வலைதளத்திலிருந்து முழுவதுமாக அகற்றப்பட்டு இருக்காது” என கூகுள் பிளாக்ஸ்பாட் ஒன்றில் தெரிவித்துள்ளது. 

18 வயதுக்கு கீழுள்ள பயனர்களுக்காக கூகுளின் புதிய நடவடிக்கைகள் என்னென்ன?

>‘SAFE SERACH’ செட்டிங்கை 18 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு கொண்டு வருவது. இது தற்போது 13 வயதுக்கு கீழுள்ள பயனர்களுக்கு இருந்து வருகிறது. 

>யூடியூப், கூகுள் சேர்ச் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் மாதிரயான அப்ளிகேஷன்களிலும் சில மாற்றங்கள். 

>இதோடு  கூகுள் சேர்ச் ரிசல்டில் தேடினால் கிடைக்கும் தங்களது படங்களை அகற்ற கோரும் ரெக்வஸ்ட் வசதி.


Advertisement

Advertisement
[X] Close