குஜராத் மாநிலத்திற்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம் சென்ற போது பாதுகாப்பு குறைபாடு ஏதும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார். ராகுல் காந்தி சென்ற கார் மீது கல் வீசப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ராஜ்நாத் தெரிவித்தார்.
பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுரைகளை மீறி ராகுல் காந்தி வேறு ஒரு காரில் பயணித்தார் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். ராகுல் காந்தி கடந்த 6 ஆண்டுகளில் 72 முறை உரிய பாதுகாப்பின்றி வெளிநாடுகளுக்கு சென்றது ஏன்? என்றும் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, குஜராத்தில் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று கூறி காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ராகுலின் கார் மீது நடத்தப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டினார்.
குஜராத் மாநிலத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட சென்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கார் மீது கடந்த சில தினங்களுக்கு முன் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அச்சம்பவம் குறித்து ராஜ்நாத்சிங் விளக்கமளித்துள்ளார்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்