[X] Close

அமைச்சர் கந்தசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரிக்கை

kiran-bedi-warns-minister-for-spreading-rumours-about-her

தம்மைப் பற்றி தவறான தகவல்களை பரப்புவதை புதுச்சேரி சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி நிறுத்திக்கொள்ளவேண்டும் என அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார்.

புதுச்சேரியில் உதான் விமான திட்டம் செயல்படுத்தப்படுவதை தடுக்க கிரண்பேடி முயற்சி செய்வதாக சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி நிகழ்ச்சி ஒன்றில் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிரண்பேடி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகம் தலையிட்டதால்தான் உதான் விமான திட்டத்தில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் புதுச்சேரி அரசுக்கு ஏற்பட இருந்த கோடிக்கணக்காண ரூபாய் இழப்பு தடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்கள் உண்மையான தகவல்களை மறைப்பதை நிறுத்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close