சூதாட்ட புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுட்கால தடையை கேரள உயர்நீதிமன்றம் நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியதால் நிம்மதி அடைந்துள்ளார் அவர்.
இந்த தீர்ப்பு பற்றி ஸ்ரீசாந்த் கூறும்போது, இந்த தீர்ப்பின் மூலம் எனக்கு புது வாழ்க்கை கிடைத்திருக்கிறது. ஒரு சம்பவம் உலகத்தின் முன் தவறாக அடையாளப்படுத்தப்பட்டுவிட்டது. சூதாட்டப் புகாரில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள் (பாகிஸ்தான் வீரர் முகமது ஆமிர்) கூட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இப்போது விளையாடுகிறார்கள். அவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் அவர்கள் நாட்டு கிரிக்கெட் வாரியமும் ஆதரவு தெரிவித்துள்ளது. என் வாழ்க்கையிலும் அப்படியொரு சம்பவம் நடைபெறும் என்று நம்புகிறேன். கடுமையாக உழைத்து இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க வேண்டும் என்பது என் நோக்கம். இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கேரள கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவும் முக்கியம். அவர்களிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்ததும் பயிற்சியை தொடங்குவேன். இப்போது 34 வயது ஆகிவிட்டது. இன்னும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்று கேட்கிறார்கள். ஏன் கிடைக்காது. பாகிஸ்தானின் மிஸ்பா உல்ஹக், யூனிஸ்கான், இந்தியாவின் சச்சின், ஹர்பஜன் சிங் ஆகியோர் நாற்பதை நெருங்கியும் ஆடினார்கள். அவர்கள்தான் என்னை ஊக்கப்படுத்துபவர்கள். உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே என் லட்சியம்’ என்றார்.
கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக, 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் பத்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்