[X] Close

“மிசோரத்திற்கு பயணம் மேற்கொள்ளாதீர்கள்” - அசாம் மக்களுக்கு அம்மாநில அரசு அறிவுறுத்தல்

இந்தியா

Dont-travel-to-Mizoram-Assam-as-it-issues-advisory-for-its-citizens
மாநில எல்லைப் பகுதியில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் காரணமாக மிசோரம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என சொந்த மாநில மக்களுக்கு அசாம் அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
அசாம் - மிசோரம் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மிசோரம் எல்லை கிராம மக்கள், காவல்துறையினர் மற்றும் அஸ்ஸாம் எல்லை கிராம மக்களுக்கு இடையே நடந்த மோதலில் அசாம் காவலர்கள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பிரச்னைக்குரிய எல்லைப் பகுதியில் இரு மாநிலங்களுக்கும் பொதுவான சி.ஆர்.பி.எஃப் படையினரை பாதுகாப்பு பணியில் அமர்த்த இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டன.
 
image
இந்நிலையில் இதுதொடர்பாக மாநில உள்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், அசாம் மாநில மக்களின் சொந்த பாதுகாப்பிற்கு எழும் அச்சுறுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் மக்கள் மிசோரம் மாநிலத்திற்கு பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. பணி மற்றும் இதர நிமித்தங்களுக்காக மிசோரம் மாநிலத்தில் வசித்துவரும் அசாம் மக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement

Advertisement
[X] Close