Published : 28,Jul 2021 08:12 PM
”ஒரு கவிஞர் கெட்டவர் என தெரியவந்தால் அவரது படைப்புகளை புறக்கணிக்க முடியுமா?” - சித்தார்த்

”ஒரு கவிஞர் கெட்டவர் என தெரியவந்தால் அவரது படைப்புகளை புறக்கணிக்க முடியுமா?” என்று நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் ஆக்டிவாக இயங்கி வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சித்தார்த். அவரது நடிப்பில் ஆந்தலாஜி படமான நவரசா ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்தப் படம் குறித்த ’சினிமா எக்ஸ்பிரஸ்’ இணையவெளி உரையாடலில் நடிகர் சித்தார்த், நடிகை பார்வதி ஆகியோர் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.
இந்த உரையாடலின் போது 'கேன்சல் கல்ச்சர்' (Cancel culture) குறித்த முக்கியமான சில கருத்துகளை சித்தார்த் முன் வைத்துள்ளார். அது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோ பதிவில் சித்தார்த் பேசுகையில், “ஒரு பெரிய கவிஞர் நிறைய கவிதைகளை எழுதி மக்களை கவர்ந்துள்ளார் என வைத்துக் கொள்வோம். இளைஞர்கள், நடுத்தர வயதினர் என எல்லோரும் அவரை கொண்டாடுகின்றனர் என வைத்துக் கொள்வோம். குறிப்பாக அந்த கவிதைகளை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே மக்கள் வைத்துக் கொள்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்த நிலையில் அந்த படைப்பாளி கெட்டவர் என தெரிந்துவிட்டால் அவரது கலையையும், படைப்புகளையும் விட்டுவிடுவீர்களா?
ஒரு கலையையும், அவரது படைப்பையும் பிரிக்க முடியுமா? படைப்பாளி கெட்டவர் என தெரிந்துவிட்டால் அவரது படைப்புகளை புறக்கணிக்கும் இடத்திற்கு நாம் வந்துவிட்டோமா? ஒவ்வொரு தனி நபரும் தனித்தனியே அதற்கான பதில்களை தேட வேண்டி உள்ளது” என சொல்லியுள்ளார் நடிகர் சித்தார்த். முழுமையான வீடியோ > இங்கே