[X] Close

சஞ்சய் தத் பிறந்தநாளில் வெளியாகும் ’கேஜிஎஃப் 2’ ரிலீஸ் தேதி?

சினிமா

KGF-2-release-date-to-be-released-on-Sanjay-Dutts-birthday

’கேஜிஎஃப் 2’ வெளியீட்டுத் தேதியை நடிகர் சஞ்சய் தத் பிறந்தநாளில் படக்குழு வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இம்மாதம் 16 ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ உலகம் முழுக்க வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா என பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் அதிக கூட்டம் கூடும் இடம் என்பதால் தியேட்டர்கள் தாமதமாகத்தான் திறக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதனால், ‘கேஜிஎஃப் 2’புதிய வெளியீட்டு தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்று இயக்குநர் பிரஷாந்த் நீல் இரு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.


Advertisement

image

இந்த நிலையில், இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள சஞ்சய் தத்துக்கு நாளை பிறந்தநாள். இதனை சிறப்பிக்கும் விதமாக படக்குழு ‘கேஜிஎஃப் 2’ படத்தின் வெளியீட்டுத் தேதியை நாளை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், படம் வரும் டிசம்பர் மாதம் தியேட்டர்களில் வெளியாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close