[X] Close

விமான நிலையத்தில் நுழைந்து காவலர்களை பாடாய்படுத்திய குரங்கு

Monkey-entered-in-Chennai-Airport

சென்னை விமான நிலையத்தில் குரங்கு நுழைந்து அட்டகாசம் செய்ததால் பயணிகள் செய்தவறியாமல் தவித்தனர்.


Advertisement

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தின் நுழைவு வாயில் வழியாக பொது மக்களோடு இணைந்து குரங்கு ஒன்று உள்ளே நுழைந்தது. அந்த குரங்கு அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்ததால் பயணிகளை கடித்துவிடுமோ என்ற அச்சத்தோடு பயணிகள் விமானத்திற்காக காத்துக் கொண்டு இருந்தனர். குரங்கு விமான நிலையத்தின் உள்ளே நுழைந்து சுமார் 5 மணி நேரம் ஆகியும் அதனை வெளியே துரத்தவோ, பிடிக்கவோ யாராலும் முடியவில்லை.

பின்பு விமான நிலையத்தில் அதிகாரிகள் கிண்டி சிறுவர் பூங்காவின் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்பு வனத்துறையினர் 4 பேர் கொண்ட குழு அமைத்து குரங்குடன் பல மணி நேரம் போராடி குரங்கை பிடித்து கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close