[X] Close

10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 6 பேர் மீது போக்சோ!

குற்றம்

Case-filed-on-6-people-under-pocso-for-raping-10th-student-at-Pollachi

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பத்தாம் வகுப்பு படித்துவரும் 14 வயது சிறுமியை 5 மாத கர்ப்பமாக்கிய 6 பேர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 14 வயது சிறுமி ஒருவர் வயிற்றுவலி காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், தன்னுடைய உறவினர்கள், ஆறு பேர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில், தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக அந்த சிறுமி தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் உறவினர்கள் மகரஜோதி(31) மற்றும் 19 வயதுமிக்க மூன்று இளைஞர்கள், 16 வயது மிக்க ஒருவர், 17 வயது மிக்க ஒருவர் என 6 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பலாத்காரத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள 17 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close