[X] Close

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் உடன் விண்வெளிக்கு பயணிக்கும் 18 வயது இளைஞர்

உலகம்

An-18-year-old-man-Oliver-Daemen-traveling-into-space-with-Amazon-founder-Jeff-Bezos

அமேசான் மற்றும் ப்ளூ ஆரிஜின் நிறுவன தலைவரும், உலகின் முதல் நிலை பணக்காரருமான ஜெஃப் பெஸாஸ் உடன் நாளை விண்வெளிக்கும் பயணிக்க உள்ளார் 18 வயது இளைஞரான ஆலிவர் டேமன். இதனை பெஸாஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். 


Advertisement

இந்த வீடியோவில் ஆலிவருக்கு அவர்கள் பயணிக்க உள்ள நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டை அறிமுகம் செய்து வைக்கிறார் பெஸாஸ். முன்னதாக இந்த பயணத்தில் பயணிக்க 205 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் டிக்கெட் வாங்கி இருந்தவர் கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்ள முடியாத சூழலில் ஆலிவர் அந்த வாய்ப்பை பெற்றுள்ளார். 

அதன் மூலம் விண்வெளிக்கு பயணிக்கும் இளம் வயதுடைய மனிதராகி உள்ளார் ஆலிவர். இந்த பயணத்தில் பெஸாஸ் உடன் 82 வயது முதியவர் Wally Funk-ம் பயணிக்க உள்ளார். 


Advertisement

imagenaal

“எனக்கு இந்த உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகள் ஏதும் இல்லை. ராக்கெட்டுக்குள் சென்று திரும்பியுள்ளது ஒரு கனவு போல உள்ளது” என ஆலிவர் தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close