[X] Close

திசையன்விளை: அதிவேகமாக சென்ற கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

தமிழ்நாடு

Nellai-Three-people-were-killed-when-a-speeding-car-overturned-on-the-road

திசையன்விளை அருகே மது போதையில் காரை இயக்கியதால், கார் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் காரில் பெட்டைகுளத்திற்கு சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து மன்னார்புரத்திற்கு காரில் அதிவேகமாக வந்துள்ளனர். அப்போது மன்னார்புரத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் கார் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

இதில், காரில் இருந்த 5 இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டனர். அதில், மன்னார்புரத்தை சேர்ந்த பெயிண்டர் பொன்சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மன்னார்புரத்தை சேர்ந்த ரெனிஸ், ரஜினி, செல்வம் மற்றும் கல்விளையைச் சேர்ந்த ஸ்டீபன் ஆகிய 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.


Advertisement

இதையடுத்து சிகிச்சை பலனின்றி ரெனிஸ், ரஜினி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை காவல்துறை ஆய்வாளர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். சம்பவ இடத்தில் பலியான பொன்சேகரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

காரில் பயணம் செய்த அனைவரும் மது போதையில் இருந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close