[X] Close

கோவை: கொட்டும் மழையிலும் தடுப்பூசிக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

தமிழ்நாடு

தமிழகத்திற்கு இன்று ஒரு லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வர உள்ளன. சென்னை விமான நிலையம் வரும் தடுப்பூசிகள் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளது. இதற்கிடையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்காக கொட்டும் மழையிலும் மக்கள் காத்திருந்தனர்.


Advertisement

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். நஞ்சுண்டாபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள, கொட்டும் மழையிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சில இடங்களில் தடுப்பூசிக்கு டோக்கன் பெற இரவு முதலே காத்திருந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இன்னும் 25 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.


Advertisement

Advertisement
[X] Close