யூரோ கால்பந்து கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி, இத்தாலியிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில், இங்கிலாந்து அணி வீரர்களை சமூக வலைத்தளங்களில் சிலர் இனவெறி ரீதியாக சாடி இருந்தனர். இந்நிலையில் இங்கிலாந்து வீரர்களை இனவெறி ரீதியாக வீரர்களை சாடுபவர்கள் வெட்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
“இந்த இங்கிலாந்து அணியின் வீரரர்களை கதாநாயகர்கள் போல கொண்டாடப்பட வேண்டுமே தவிர அவர்களை இனவெறி ரீதியாக சாடக்கூடாது. வீரர்களை இது போல சாடுபவர்கள் வெட்கப்பட வேண்டும்” தெரிவித்துள்ளார் அவர்.
பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் இத்தாலி அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. இங்கிலாந்து அணியில் கேப்டன் கேன், மெக்குயிர் இருவரும் பெனால்டி சூட்டில் கோல் அடிக்க, மார்கஸ் ராஷ்போர்ட், ஜாடன் சான்சோ, சாகா ஆகிய மூவரும் அடித்த கோல்களை இத்தாலி கோல்கீப்பர் டோனாருமா தடுத்துவிட்டார்.
கோல் அடிக்கத் தவறிய 3 வீரர்களுமே கறுப்பின வீரர்கள் என்பதால், தோல்விக்கு இந்த 3 வீரர்களும் காரணமாகிவிட்டதாகக் கூறி சமூக வலைதளத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் நிறவெறி, இனவெறிப் பதிவுகளை இடத் தொடங்கினர். இப்பதிவுகள்தான் தற்போது சர்வதேச அளவில் பெரும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளன.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!